Thursday, February 5, 2026
HomeUncategorizedஎன் பாடல் வரிகளை படத்தில் பயன்படுத்துகின்றனர்- ஆதங்கத்தில் வைரமுத்து!

என் பாடல் வரிகளை படத்தில் பயன்படுத்துகின்றனர்- ஆதங்கத்தில் வைரமுத்து!

நான் எழுதிய பல பாடல்களின் “பல்லவிகள்” தற்போது தமிழ் திரைப்படங்களில் தலைப்பாக பயன்படுத்துகின்றனர். இதற்காக அவர்கள் யாரும் என்னிடத்தில் அனுமதி பெறவில்லை, என்று ஆதங்கத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பாடல் ஆசிரியர் வைரமுத்து. 

அவர் பதிவிட்டுள்ள பதிவில்

என்னுடைய
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட 
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை

ஒன்றா இரண்டா…

பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,
பனிவிழும் மலர்வனம்,
வெள்ளைப் புறா ஒன்று,
பூவே பூச்சூட வா,
ஈரமான ரோஜாவே,
நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம்,
மின்சாரக் கண்ணா,
கண்ணாளனே,
என்னவளே, உயிரே,
சண்டக்கோழி,
பூவெல்லாம் கேட்டுப் பார்,
தென்மேற்குப் பருவக்காற்று,
விண்ணைத் தாண்டி வருவாயா,
நீ தானே என் பொன் வசந்தம்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
தங்கமகன்

இப்படி இன்னும் பல…

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக
இவர்கள் யாரையும்
நான் கடிந்து கொண்டதில்லை
காணும் இடங்களில் கேட்டதுமில்லை

செல்வம் பொதுவுடைமை
ஆகாத சமூகத்தில்
அறிவாவது
பொதுவுடைமை ஆகிறதே
என்று அகமகிழ்வேன்

ஏன் என்னைக் கேட்காமல்
செய்தீர்கள் என்று கேட்பது
எனக்கு நாகரிகம் ஆகாது

ஆனால்
என்னை ஒருவார்த்தை
கேட்டுவிட்டுச் செய்வது
அவர்களின்
நாகரிகம் ஆகாதா?

என்று பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments