Home Uncategorized கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள்.. வைரமுத்து நெகிழ்ச்சி!

கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள்.. வைரமுத்து நெகிழ்ச்சி!

மாநிலங்களவை எம்.பியாக இருந்து விடைபெற்றுள்ள வைகோ, புதிதாக எம்.பியாக பொறுப்பேற்றுள்ள கமல்ஹாசன் ஆகியோருக்கு தனது பாணியில் கவிதையில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்

நாடாளுமன்றம் சார்ந்து
புதிதாகப் 
பொறுப்பேற்றுக்கொண்ட
நண்பர்களையும்
குறிப்பாக இருவரையும்
பாராட்டுகிறேன்

ஒருவர் 
நாடாளுமன்றத்தை
நிறைவுசெய்கிறவர்;
இன்னொருவர்
நாடாளுமன்றத்தில்
நுழைவு செய்கிறவர்

மனித உரிமைகளுக்கும்
தமிழ் தமிழர்
தமிழ்நாட்டு உரிமைகளுக்கும்
சங்கு முழங்கிய
கலிங்கப்பட்டிச் சிங்கம்
வைகோ நிறைவுபெறுகிறார்

அவருக்கு
நாடே ஊராக இருந்தது;
நாடாளுமன்றமே
வீடாக இருந்தது
அவர் நெகிழ்ச்சியோடு
விடைபெறுவதில்
நெஞ்சு குழைந்தது;
வாழ்த்துகிறேன்

நுழைவு செய்கிறவர்
நண்பர்
கலைஞானி கமல்ஹாசன்
“நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயைச் சுட்டு விட்டவன்”

40 ஆண்டுகளுக்கு முன்னால்
நான் எழுதிய வரிகளுக்கு
இன்று நியாயம் செய்திருக்கிறார்
அவரும் 
அனைத்து உறுப்பினர்களும்
தமிழில் உறுதிமொழி பூண்டது
எங்கள் புத்துணர்ச்சிக்குப்
புதுரத்தம் பாய்ச்சியது

வாழ்க!
உங்கள் 
நாடாளுமன்ற நாட்கள் 
நாட்டுக்கு நன்மை எழுதட்டும்

இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

Exit mobile version