Thursday, March 19, 2026
HomeUncategorizedவளைகாப்பின் அறிவியல் பின்னணி ...

வளைகாப்பின் அறிவியல் பின்னணி …

வளைகாப்பு! கர்ப்பிணிப் பெண்களுக்குகாகச் செய்யப்படும் ஒரு சடங்கு. இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். வளைகாப்பு நிகழ்வானது பெரும்பாலும் கருவுற்ற 7-வது மாதத்தில்
செய்யப்படுகிறது. வளைகாப்பு நடத்தப்படுவதற்குப் பின்னால் உள்ள தேவையையும், அதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.
வளைகாப்பு நடத்தப்படுவதன் நோக்கம்:

குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படும்போது கருவுற்ற பெண்ணுக்கு ஒரு மன தைரியம் உண்டாகிறது. மேலும் வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில்
'கண்ணாடி வளையல்' அணிவிக்கப் படுகிறது. 

அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப் படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments