வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
சில மாநிலத்திற்கான பண்டிகை அல்லது விழாக்களுக்கு அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் தான் வருகிறது.
மார்ச் 2- (ஞாயிறு) – வார விடுமுறை
மார்ச் 7 – (வெள்ளி) – சாப்சர் குட் – மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை
மார்ச் 8 – (2வது சனிக்கிழமை) – வார விடுமுறை
மார்ச் 9 – (ஞாயிறு) – வார விடுமுறை
மார்ச் 13 – (வியாழன்) -ஹோலிகா தஹான், ஆட்டுக்கல் பொங்கல் பண்டிகை – உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், கேரளா
மார்ச் 14 – (வெள்ளி) – ஹோலி, திரிபுர, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், கேரளா மற்றும் நாகலாந்து மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் பொது விடுமுறை
மார்ச் 15 – (சனிக்கிழமை) -அகர்தலா, புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விடுமுறை
மார்ச் 16 – (ஞாயிறு) – பொதுவிடுமுறை மார்ச் 22 (4வது சனிக்கிழமை) பிஹார் திவாஸ்
மார்ச் 23 – (ஞாயிறு) – பொதுவிடுமுறை
மார்ச் 27 (வியாழன்) -ஷதப் இ கத்ர் – ஜம்மு உள்ளூர் விடுமுறை
மார்ச் 28 – (வெள்ளி) ஜூமத் உள் விதா – ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் விடுமுறை
மார்ச் 30 – (ஞாயிறு) – பொதுவிடுமுறை
மார்ச் 31 – ரம்ஜான் விடுமுறை இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
