ஒவ்வொரு மாதமும் இந்தியா முழுவதும் செயல்படும் வங்கிகளுக்கு பொது விடுமுறை தினங்கள் அறிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஜூலை மாதம் வங்கிகள் நீண்ட கால விடுமுறைக்கு தயாராகி வருகின்றன.
அதாவது மொத்தம் 14 நாள் விடுமுறைகளைக் கொண்ட ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டது.
இன்று முதல் அதாவது ஜூலை 9 முதல், மாநில வாரியாக, மத விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் கீழ் வரும் 9 விடுமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
மேலும் மொத்தம் உள்ள 14 நாட்கள் விடுமுறையில் 5 நாட்கள் வழக்கமான வார இறுதி விடுமுறையாக இருக்கும். இந்த விடுமுறை பட்டியல் பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இந்த விடுமுறைகளை மூன்று பொது வகைகளின் கீழ் வகைப்படுத்துகிறது. அதாவது, ‘பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை’, மற்றும் ‘நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை’ மற்றும் ‘வங்கிகள் கணக்குகளை மூடுவது ’ ஆகியவற்றின் கீழ் அறிவிக்கப்படும்.
