Home செய்திகள் “ஊழல்வாதிகளை காப்பாற்றும் அரசியல் ஆகக்கூடாது!” – விஜய்க்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை

“ஊழல்வாதிகளை காப்பாற்றும் அரசியல் ஆகக்கூடாது!” – விஜய்க்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் ‘அரசியல் நாகரிக சந்திப்புகள்’, ஊழல் புகார்களுக்கு உள்ளான முன்னாள் திமுக அமைச்சர்களைக் காப்பாற்றும் முயற்சியாக அமைந்துவிடக் கூடாது என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கட்சித் தலைவர்களை விஜய் சந்திப்பது பாராட்டுக்குரியது என்றாலும், சித்தாந்த ரீதியாக முரண்பட்ட தலைவர்களைச் சந்திக்காமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்திப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியைத் தக்கவைக்கவே இந்த ‘நாகரிக அரசியல் பயணம்’ மேற்கொள்ளப்படுவதாக விமர்சித்துள்ள அவர், திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமான ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீரழிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரங்கள் இருந்தும் முந்தைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் புதிய ஆட்சிக்கு வாய்ப்பளித்துள்ளார்கள் என்றும், அதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version