Home Uncategorized வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:- ✍?அடையாளசான்று

1,ஆதார் அட்டை
2, வாக்காளர் அடையாள அட்டை
3, பான் அட்டை (இருந்தால்)

சார்ந்தவர்களின் விபரம்

1, மனைவி/கணவர் விபரம்
2, குழந்தைகள் விபரம்
அவர்களது மேற்சொன்ன அடையாள சான்று..

வழக்குகளின் விபரங்கள் (ஏதேனும் இருப்பின்)

1, வழக்கு எண் 
2, வழக்கின் தன்மை
3, வழக்கின் தற்போதைய நிலை
4, தண்டனைவிவரம் (ஏதேனும் இருந்தால்)

அசையும் சொத்து (சார்ந்துள்ளவர்களுக்கும் தனியாக வேண்டும்)

1, கையிருப்பு ரொக்கம்
2, வங்கியில் உள்ள தொகை பற்றிய விபரம்
  i, வங்கியின் பெயர்
  ii, கணக்கு எண்
  iii, கணக்கில் உள்ள தொகை
  iv, வங்கி அமைந்துள்ள ஊர்
3, சேமிப்பு சம்பந்தமானவிபரம் 
 (உதாரணமாக – lic or அஞ்சல் சேமிப்பு,insurance policies)
4, சொந்த வாகனங்கள் பற்றிய விபரம் (
  i, வண்டியின் பெயர்
  ii, பதிவு எண்
  iii, வண்டி வாங்கப்பட்ட ஆண்டு
  iv, வாங்கப்பட்ட தொகை
4, நகைகள் (தங்கம் வெள்ளி விலை உயர்ந்த பொருட்கள்)
   i, நகையின் அளவு (கிராம் / சவரன்)
  ii, மதிப்பு

அசையா சொத்துகள் விபரம்(சார்ந்துள்ளவர்களுக்கும் தனியாக வேண்டும்)

1, விவசாய இடம்
2, விவசாயமற்ற இடம்
3, வணிக கட்டிடங்கள்
4, குடியிருப்பு கட்டிடங்கள்

    i, சொத்து அமைந்துள்ள இடம் மற்றும் சர்வே எண்கள்
    ii, பரப்பளவு
    iii, சொத்து வாங்கியநாள்
    iv, விலைக்கு வாங்கிய போது உள்ள மதிப்பு
    v, தற்போதைய சந்தை மதிப்பு

கடன்கள் (சார்ந்துள்ளவர்களுக்கு தனியாக வேண்டும்)

1, வங்கியில் வாங்கியுள்ள கடன்
   i, வங்கியின் பெயர்
   ii, கடன் தன்மை(கடன் கணக்கு எண்)
   iii, கடன் தொகை (நிலுவை)

2, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகள் (சொந்த வீடு மற்றும் சொத்துகள் உள்ளோர் கவனத்திற்கு)

   i, விட்டுவரி 
   ii, குடிநீர் வரி
   iii, மின்சாரகட்டணம்
   iv, தொலைபேசி கட்டணம்
வரி இனங்கள் பாக்கி எதுவும் நிலுவையில் இல்லை என்ற சான்று பெற்று இணைப்பது மிகவும் நல்லது.
   
தொழில் குறித்த விபரங்கள் (சார்ந்துள்ளவர்களுக்கு தனியாக வேண்டும்)

கல்வித்தகுதி (சார்ந்துள்ளவர்களுக்கும் தனியாக வேண்டும்).

 பிற்படுத்தப்பட்டோர், அல்லது தாழ்த்தப்பட்டோர் பட்டியல் இனத்தவர் என்றால் அதற்கான சான்று அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

தகவல்: 
ஒளிரும் உள்ளாட்சி
மாத இதழ் 

Exit mobile version