Saturday, March 14, 2026
HomeUncategorizedவாரிசு ஆடியோ வெளியீடு- விஜய் சொன்ன குட்டி கதை

வாரிசு ஆடியோ வெளியீடு- விஜய் சொன்ன குட்டி கதை

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அப்படத்தின் நடித்த நடிகர் – நடிகைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும், விழா தொடங்குவதற்கு முன்பே இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்து கொண்டே இருந்தனர். 

இதனிடையே, விழாவின் இறுதியாக நடிகர் விஜய் மைக்கை பிடித்து “என் நெஞ்சில் குடியிருக்கும்” என பேச ஆரம்பித்ததும் அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய வணக்கத்தை வைத்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். 

அதில், 1990களில் ஒரு போட்டியாளர் என்னை நோக்கிப் பார்த்தார். அதன் பின்னர், நான் எங்கே போனாலும் என்னை பின் தொடர்ந்தார். நான் அவரை பார்த்து விட்டு அவரை விட முன்னேறணும்னு ஓடினேன். நமக்கு எப்போதுமே ஒரு போட்டியாளர் வேண்டும்.. அந்த போட்டியாளர் என்னுடன் போட்டி போட ஆரம்பிச்சது 1992ல அவர் பெயர் ஜோசப் விஜய்.. உங்களுக்கு நீங்க தான் காம்பெடிட்டர் நண்பா.. உங்களை நீங்க வெல்லணும்னு முயற்சி செய்யுங்க என நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தன்னை பற்றிய குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments