Saturday, March 28, 2026
Homeலைஃப்ஸ்டைல்சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் 12% குறைவு- ஆய்வில் தகவல்!

சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் 12% குறைவு- ஆய்வில் தகவல்!

அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 80,000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்ட ஆய்வில், சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer) ஏற்படும் அபாயம் 45 சதவீதமும், நிணநீர் மண்டலப் புற்றுநோய் (Lymphoma) ஏற்படும் அபாயம் 25 சதவீதமும் குறைவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் செரிமான மண்டலத்தைத் தாக்கும் நிலையில், சைவ உணவுகள் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கின்றன.

‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்’ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கை, உணவுப் பழக்கவழக்கங்கள் நேரடியாகப் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களிடையே கூட, சைவ உணவைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கே இந்த கூடுதல் பாதுகாப்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments