Home செய்திகள் சென்டர் மீடியனில் மோதி நொறுங்கிய டூரிஸ்ட் வேன்- ஒருவர் பலி – 15 பேர் காயம்!

சென்டர் மீடியனில் மோதி நொறுங்கிய டூரிஸ்ட் வேன்- ஒருவர் பலி – 15 பேர் காயம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா வந்த‌வர்களின் வேன் விபத்துக்குள்ள‌னதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேன் மூலம் வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று, விழுப்புரம் திரும்பியுள்ளனர்.

நாகை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதியுள்ளது.

இதில், மருதூர் கிராமத்தை சேர்ந்த பொன்முடி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த 15 நபர்கள் லேசான காயத்துடன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாலை நடுவே கிடந்த வாகனத்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version