Thursday, March 19, 2026
HomeUncategorizedதிருநீறிடுதல் அவசியம் என்ன?

திருநீறிடுதல் அவசியம் என்ன?

விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம். திருநீறு `விபூதி’ என்றும் அழைக்கப்படும். 

திருநீறறுப்பதிகம் – ஞானசம்பந்தர்

மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு
செந்தூர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே ” 

சிவபெருமானை நினைத்து விபூதி பூசும்போது, 3 கோடுகளாக பூசவேண்டும். இவ்வாறு பூசுவதை திரிபுண்டரம் என்று கூறுவர்.
மூன்று கோடுகளாக விபூதி பூசுவதின் இரகசியம் என்னவென்றால், மும்மலங்களை அழிப்பதுடன், கடந்த காலங்களிலும் செய்கின்ற பாவங்களும் நீங்கி, இறுதியில் மோட்சம் கிடைக்கும்.
திருநீறிடுதல் என்பது மாசில்லாத சுத்தமான நிலையின் அடையாளமாகும். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments