Home Uncategorized ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு – விஜய் ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டார்

‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு – விஜய் ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் தொடர் படப்பிடிப்புகளுக்குப் பிறகு நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Exit mobile version