Thursday, March 5, 2026
HomeUncategorizedமுதல் படத்திலேயே சம்பவம் செஞ்சிட்டான்- தம்பி பற்றி விஷ்ணு விஷால் கலகல பேட்டி!

முதல் படத்திலேயே சம்பவம் செஞ்சிட்டான்- தம்பி பற்றி விஷ்ணு விஷால் கலகல பேட்டி!

வெண்ணிலா கபடி குழு  படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதன் பிறகு குள்ளநரி கூட்டம், நீர்பறவை, இன்று நேற்று நாளை, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதுவரையில் கிட்டத்தட்ட 21 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது இவர் இரண்டு வானம், ஆரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா “ஓஹோ எந்தன் பேபி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து மிதிலா பல்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி  உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி வரும் நிலையில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனமும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றது. 

சமீபத்தில் இந்த படத்தை பற்றி நடிகர் விஷ்ணு விஷால் கூறும்போது இதுவரை நான் 21 படங்களில் நடித்துள்ளேன். ஆனால் ஒரு முத்த  காட்சியில் கூட நான் அடிக்கவில்லை. ஆனால் என் தம்பி அறிமுகம் ஆகும் முதல் படத்திலேயே மூன்று முத்த காட்சிகளில் விட்டான் என்று கலகலப்பாக கூறியுள்ளார்.. ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments