மும்பை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வரும் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ‘வாட்டர் மெட்ரோ’ (Water Metro) படகுச் சேவைகள் படிபடியாகத் தொடங்கப்பட உள்ளன.
சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இந்தத் திட்டத்தின் கீழ், பேட்டரி மூலம் இயங்கும் 6 முதல் 8 அதிநவீன மின்சாரப் படகுகள் இயக்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக நாரிமன் பாயிண்ட், வொர்லி, பாந்த்ரா, ஜூஹு மற்றும் வெர்சோவா ஆகிய முக்கியமான கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் இரண்டு வழித்தடங்களில் இந்தச் சேவை தொடங்கும். கேரளாவின் கொச்சி வாட்டர் மெட்ரோவை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்படும்.
இந்தத் திட்டம், சாலைப் பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதுடன், தெற்கு மும்பையிலிருந்து நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வெறும் 40 நிமிடங்களில் சென்றடைய வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

