Home செய்திகள் West Bengal Assembly Election வாக்குப்பதிவில் வன்முறை!

West Bengal Assembly Election வாக்குப்பதிவில் வன்முறை!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29, 2026) நடைபெற்று வரும் நிலையில், பல மாவட்டங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

ஹவுரா மாவட்டத்தின் பாலி (Bally) தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆவேசமடைந்த அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடித்தது;

இதனைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்ததுடன் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தாவின் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், நதியா மாவட்டத்தின் சாப்ரா பகுதியில் பாஜக முகவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல்கள் வெடித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், ஹூக்ளி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடர்ந்து வரும் நிலையில், மத்திய படைகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version