Home செய்திகள் ‘நான் முதல்வன்’ இனி இல்லை?..ஸ்டாலின் தடயங்கள் அழிப்பு?

‘நான் முதல்வன்’ இனி இல்லை?..ஸ்டாலின் தடயங்கள் அழிப்பு?

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர், தற்போது அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) கணக்கில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, ‘TN Skill Corporation’ என்று புதிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் பெயர் மாற்றத்தோடு மட்டும் நிறுத்தாமல், அந்த எக்ஸ் பக்கத்தின் முகப்புப் படம் (Profile Picture) மற்றும் முகப்புப் பேனர் (Banner) ஆகியவற்றில் இருந்து முந்தைய திமுக அரசின் விளம்பரங்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, புதிய பாணியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன; அதோடு, முந்தைய ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் குறித்துப் பதிவிடப்பட்ட அனைத்துப் பழைய தரவுகளும் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து முழுமையாக துடைத்தெறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அப்போதைய அமைச்சர்கள் கலந்துகொண்டு ‘நான் முதல்வன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்த வீடியோக்கள், மாணவர்களுடனான உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் எக்ஸ் பக்கத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதனை ஒரு தூய்மையான திறன் மேம்பாட்டுத் திட்டமாகத் தொடர்ந்து நடத்துவதற்காகவே, பழைய அரசியல் விளம்பரப் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகத் துறை சார்ந்த வட்டாரங்கள் மூலம் சொல்லப்படுகிறது.

Exit mobile version