Saturday, March 21, 2026
HomeUncategorizedநடுவானில் பிறந்த ஆண் குழந்தை.. தாய் சேய் நலம்!

நடுவானில் பிறந்த ஆண் குழந்தை.. தாய் சேய் நலம்!

 மஸ்கட்டில் இருந்து மும்பை விமானத்தில் வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. விமானம்  அதிகாலை 3:15 மணி அளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

 உடனடியாக விமான பணியாளர்கள் கேபினில் கர்ப்பிணிக்கு அறை ஒன்றை தயார் செய்தனர். மேலும் விமானி மூலம் மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த நர்ஸ் ஒருவர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முன் வந்தார். அவர் பணிப்பெண்கள் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார். இதனால் அந்த பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதை பார்த்த பயணிகள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். மும்பையில் விமானம் தரை இறங்கியவுடன் தாய் சேய் இருவரையும் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments