திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள். அவரது மகள் காளீஸ்வரி வயது 45 காளீஸ்வரிக்கு 28 வயதில் பவித்ரா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் என்பவருடன் பவித்ராவுக்கு திருமணம் நடந்தது திருமணம் முடிந்த நிலையில், இருவருக்கும் பள்ளப்பட்டியில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு ரித்திக்ஷா மற்றும் தீப்தி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு தெரிகிறது.
பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் பவித்ராவுக்கு முறையற்ற உறவு இருந்ததாகவும் அதன் காரணமாகவே பிரபாகரனுக்கும் பவித்ராக்கும் தகராறு ஏற்பட்டு ஒட்டன்சத்திரம் வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று பவித்ரா அந்த நபருடன் வீட்டை விட்டு மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தனது மகள் மற்றொருவருடன் ஓடிப் போனதால் பாட்டி செல்லம்மாலும் அம்மா காளீஸ்வரியும் அவமானம் தாங்க முடியாமல் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துள்ளனர்.
பின்பு வீட்டில் இருந்த பேனில் இவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து இடையகோட்டை காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் நான்கு பேரின் சடலங்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
