Home உலகம் 22 நாட்களுக்கு ஒருமுறை தோழிகளுடன் சந்திப்பது பெண்களின் மனநலத்தை மேம்படுத்தும்.. புதிய ஆய்வு!

22 நாட்களுக்கு ஒருமுறை தோழிகளுடன் சந்திப்பது பெண்களின் மனநலத்தை மேம்படுத்தும்.. புதிய ஆய்வு!

Group Of Female Friends Enjoying Night Out At Rooftop Bar

பெண்களின் மன ஆரோக்கியத்திற்கு சராசரியாக 22 நாட்களுக்கு ஒருமுறை தோழிகளுடன் சந்திப்புகள் (girls’ night) தேவை என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பெண்களின் உணர்வுப்பூர்வமான சமநிலைக்கு இத்தகைய சமூகக் கூடல்கள் ஒரு ஆடம்பரம் என்பதைத் தாண்டி இன்றியமையாதவை என இதில் பங்கேற்ற 78 சதவீதப் பெண்கள் அழுத்தமாகக் கூறியுள்ளனர்.

ஆகஸ்ட் 2025-இல் டாக்கர் ரிசர்ச் (Talker Research) அமைப்பு நடத்திய இந்த ஆய்வில், இந்தத் தோழிகள் சந்திப்பின் போது 88 சதவீதப் பெண்களின் விருப்பமான பானமாக ஒயின் (wine) இருப்பதாகத் தெரியவந்துள்ளதுடன், முதல் விருந்தினர் வந்த 16 நிமிடங்களுக்குள் 85 சதவீதத்தினர் அதன் பாட்டிலைத் திறந்துவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது போன்ற சந்திப்புகளுக்கு ஆடம்பரமான திட்டமிடல்களை விட, எளிய சடங்குகள் மூலம் இணக்கமான சூழலை உருவாக்குவதே முக்கியம் என்று ஜேன் டங்க்லி என்பவர் வலியுறுத்துகிறார். இந்தச் சந்திப்புகளில் உணவும் உரையாடலும் சம அளவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன; சுமார் 62 சதவீதப் பெண்கள் ஒரு காதல் டின்னரை விட தங்களது தோழிகளுடனான நைட்டைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகக் கூறியிருப்பது தோழமைகளுக்கு இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான ஆதரவைக் காட்டுகிறது.

மேலும், 83 சதவீதப் பெண்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத இயல்பான உரையாடல்களையே விரும்புகின்றனர்; இதில் வேலை சார்ந்த பிரச்சனைகள் அல்லது பிரபலங்களின் செய்திகளை விட தங்களது தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் குடும்பம் பற்றிய பகிர்வுகளே முதலிடம் பிடிக்கின்றன.

பெரும்பாலும் முறையான திட்டமிடல் இல்லாமல், தோழமைகளில் யாராவது ஒருவரின் வீட்டில் இயல்பாக நடக்கும் இத்தகைய நைட்களில் திரைப்படங்கள் பார்ப்பது (66%), நடனமாடுவது (55%) மற்றும் இணைந்து சமைப்பது (45%) போன்ற செயல்பாடுகள் முக்கியமாக இடம் பெற்று பெண்களின் மன அழுத்தத்தைக் குறைத்து அவர்களை ரீசார்ஜ் செய்கின்றன.

Exit mobile version