Monday, March 23, 2026
HomeUncategorizedஜூலை 17: இண்டர்நேசன்ல் எமோஜி டே! உங்க Favourite Emoji என்ன?

ஜூலை 17: இண்டர்நேசன்ல் எமோஜி டே! உங்க Favourite Emoji என்ன?

சகலமும்  தொழில்நுட்பமாக மாறி விட்ட இந்த டிஜிட்டல் உலகில் எமோஜிக்கள் இல்லாமல் எந்த ஒரு உரையாடல்களும் இருப்பதில்லை. மகிழ்ச்சி, கவலை, சோகம், கோபம் என அனைத்து வகையான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்காக அந்தந்த முகப்பாவத்துடனும், வித்தியாசமான முகபாவத்துடன் ஆயிரக்கணக்கான எமோஜிகள் இருக்கின்றன.  ஒரு சிலரிடம் தங்கள் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் பலருக்கும் இந்த எமோஜிக்கள் தான் உதவியாக இருக்கின்றன. அது காதலாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும். இப்படி, பல வகைகளில் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் இந்த எமோஜிக்கள் யார்? இந்த எமோஜிக்களின் உலகை உருவாக்கியவர் யார்? தெரிந்து கொள்வோமே

செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வந்த சூழலில், மனிதனின் உணர்வுகளை எமோஜியாக முதன்முதலில் வடிவமைத்தது ஷிகேடகா குரிடா (Shigetaka Kurita) தான். ஜப்பானில் வானிலை அறிக்கைகளை வாசிக்கும் போது சின்ன சின்ன கிராப்பிக்ஸ் மூலம் செய்திகளைச் சொல்ல எமோஜிக்களை பயன்படுத்தி வந்தனர். 1995-களில் செல்போன்களில் இணையம் பயன்படுத்தும் வசதிகள் வந்தது. அப்போது இந்த எமோஜிக்கள் அனைத்தும் மொபைல் இன்டர்நெட் பிளாட்பார்ம்-க்கு வந்தது. அப்போது இருந்த எமோஜிக்களின் எண்ணிக்கை வெறும் 76 தான். இதையடுத்து 2002ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி எமோஜி காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எமோஜி அப்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு, மிகவும் பிரபலமானது. எனவே அதனை அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலை 17ம் தேதியை எமோஜி தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டு, 2014 ஜூலை 17-ம் தேதி முதன்முதலில் உலக எமோஜி தினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Emoji

 ஆண்டுதோறும் புதிதாக பல்வேறு வகையான எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் அதிகம் பயன்படுத்தும் டாப் எமோஜிகளுக்கு விருதுகளும் கொடுக்கப்படுகின்றன.
எமோஜி பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்களின்படி, ? (மகிழ்ச்சியால் கண்ணீர் வடிக்கும் முகம் – Face with Tears of Joy) தான் உலகளவில் சமூக ஊடகங்களில், குறிப்பாக X (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட எமோஜியாக உள்ளது. இந்த எமோஜி, “LOL” (சிரிப்பு) அல்லது “LMAO” போன்ற இணைய வாசகங்களுக்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது. 

Emoji

ஃபேஸ்புக்கில் இருக்கும் எமோஜிக்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது  8 கோடிக்கும் அதிகம். அதேபோல் ஃபேஸ்புக்கின் மெஸெஞ்சரில் ஒருநாளைக்கு 570 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும்  80 கோடி எமோஜிக்கள் ஃபேஸ்புக் பதிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகக் காதல், முத்தம், இதயங்கள், அதிக மகிழ்ச்சி, கண்ணடிப்பது, வெட்கம், அழுகை போன்ற எமோஜிக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 

செப்டம்பர் 2024 நிலவரப்படி, யூனிகோடு தரநிலையில் மொத்தம் 3,790 எமோஜிக்கள் உள்ளன. இதில் பாலினம், தோல் நிறம், கொடிகள் மற்றும் விசைப்பலகை, கொடி உள்ளிட்ட பிற வரிசைகளை உருவாக்கப் பயன்படும் கூறுகளும் அடங்கும். சமீபத்திய எமோஜி வெளியீடு எமோஜி 16.0 ஆகும், இது 8 புதிய எமோஜிக்களைச் சேர்த்தது. அடுத்த வெளியீடான எமோஜி 17.0, செப்டம்பர் 2025 இல் எதிர்பார்க்கப்படுகிறது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments