Sunday, March 15, 2026
HomeUncategorizedநடிகை யாஷிகா மீது பிடிவாரண்ட்

நடிகை யாஷிகா மீது பிடிவாரண்ட்

நடிகை யாஷிகா மீது பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போன 2021 ஆம் வருஷம் ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற காரானது மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாச்சுது..

இந்த விபத்தில் யாஷிகாவின் ஃப்ர வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தாய்ங்க ஆனா பலத்த காயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு உடல்நலம் தேறினார்.

அவ்வப்போது விபத்தில் உயிரிழந்த தன்னுடைய தோழி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டு வந்தார். இந் நிலையில் யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்குது. 

குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா ஆஜராக வேண்டியதாக இருந்துச்சு.

ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் வரும் 2023 மார்ச் 25 ஆம் தேதிக்கு ஆஜராக வேண்டுமென்று கூறி நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அப்படி ஒருவேளை அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்குது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments