Tuesday, March 24, 2026
HomeUncategorizedயோகி பாபு - நடிகை ஓவியா பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

யோகி பாபு – நடிகை ஓவியா பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகை ஓவியா ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு முதலில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பெயரை தற்போது ‘பூமர் அங்கிள்’ என்று மாற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதனை நடிகை வாணி போஜன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். 

அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கிறார். சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படம் வெளியீடு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments