Wednesday, March 11, 2026
HomeUncategorized'லவ் டுடே' - யோகி பாபு உருக்கம்

‘லவ் டுடே’ – யோகி பாபு உருக்கம்

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லவ் டுடே’  திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் முதல் படமான கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து இருந்தார். அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் யோகிபாபு நடித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும்  இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார். இந்த படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

அதில், யோகி பாபு பகிர்ந்த மீம்  ஒன்று  இணையவாசிகளின்  கவனத்தையும் திசைத்திருப்பியுள்ளது. அதில், வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது என்று இடம்பெற்றுள்ளது. 

இவர் பகிர்ந்த இந்த மீம்மை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். யோகிபாபுவின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் அவர் உருவ கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments