Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்சென்னை மதுரவாயலில்.. மது அருந்திய இளம்பெண் மரணம்!

சென்னை மதுரவாயலில்.. மது அருந்திய இளம்பெண் மரணம்!

Image: Meta AI

 

காதலனுடன் மது அருந்திய இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சென்னை மதுரவாயலில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் கணேஷ் ராம் (29). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் சினிமா டைரக்டராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் சொந்த ஊர் சேலம். இவருக்கு instagram மூலம் சென்னை ராயப்பேட்டை சேர்ந்த ஸ்ரீலட்சுமி (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது.

 ஸ்ரீலட்சுமி நந்தனத்தில் உள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தின மாலை ஸ்ரீலட்சுமி வேலை முடிந்ததும் காதலன் கணேஷ் ராம் தங்கியுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். 

சிறிது நேரத்தில் ஸ்ரீலட்சுமிக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. அவர் கழிவறைக்குள் சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ் ராம், மதுரவாயில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்ரீலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் இளம் பெண் மது அருந்திவிட்டு அளவுக்கு அதிகமாக கோழி இறைச்சியை சாப்பிட்டதால் உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டது என்றும், இதனால் தான் அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே ஸ்ரீலட்சுமியின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Disclaimer: Drinking Alcohol is injurious to health

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments