Thursday, February 5, 2026
HomeUncategorizedகாவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை! பரபரத்த சேலம்!

காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை! பரபரத்த சேலம்!

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மதன் என்கிற அப்பு தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து அதற்கு நிபந்தனை ஜாமின் பெற்று சேலம் மாநகர் எல்லைக்குட்பட்ட அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 10ம் தேதியிலிருந்து காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தன் மனைவியோடு காலை உணவு சாப்பிடவந்த மதனை திடீரென உணவகத்தின் உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மதன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments