Thursday, February 5, 2026
HomeUncategorizedஓஹோ ஜீ டிவி சரிகமப ஷோவில் இப்படி எல்லாம் நடக்குதா? கடுப்பான நெட்டிசன்ஸ்!

ஓஹோ ஜீ டிவி சரிகமப ஷோவில் இப்படி எல்லாம் நடக்குதா? கடுப்பான நெட்டிசன்ஸ்!

பல முன்னணி தொலைக்காட்சிகளான விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் சேனல்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. ஒரு சேனலில் ஒளிபரப்பாகும் அதே ஷோ இன்னொரு சேனலிலும் உருவாகும்.  இந்த போட்டியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக பார்த்து வருகின்றனர். சமீபத்தில்  ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு புது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் முடிவடைந்ததைத் தொடர்ந்த இந்த ஞாயிற்றுக்கிழமை சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 ஒளிபரப்பானது. இந்த சீசனில் சீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரசாத், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்து முடிந்துள்ள நிலையில் வாரம் மெகா ஆடிஷன் மூலமாக போட்டியில் பங்கேற்க உள்ள இறுதி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த, ஸ்ரீவாணி கலந்து கொண்டு, கன்னட மொழி பாடலைப்பாடி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

saregamapa

ஆனால், இந்த ஸ்ரீவாணி, ஏற்கனவே ஜீ கன்னட சேனலில் ஒளிபரப்பாகி வந்த சரிகபம நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சிறப்பாக பாடி, ஃபைனல் வரை சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியிலும் நடுவராக பாடகர் விஜய் ஸ்ரீ பிரசாத் தான் இருந்தார். ஏற்கனவே ஓராண்டுக்கும் மேலாக, ஒரு நிகழ்ச்சியில் பாடி, அதற்காக பயிற்சி எடுத்த ஒரு பெண்ணை இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பாடவைத்து தேர்ந்தெடுத்து, அவரை, பாடலில் எந்தவிதமான பயிற்சியும் இல்லாதவர்களுடன் மோதவிடுவது எந்த வகையில் நியாயம். இது எல்லாம் தெரிந்து இருந்தும், பாடகர் விஜய் ஸ்ரீ பிரசாத், அந்த பெண் யார் என்றே தெரியாதது போல, அவரை அழைத்து, பாடவைத்து ரசிக்கிறார். இப்படி நடிக்கும் விஜய் ஸ்ரீ பிரசாத்திற்கு ஆஸ்கர் விருதே தரலாம் என்றும், அனைத்துமே ஸ்கிரிட் தானே என்றும், உண்மையான திறமையாளர்கள் வெளியில் வரவே முடியாதா என இணையத்தில் நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments