Skip to main content

சுவையான "முறுக்கு" - தீபாவளி ஸ்பெஷல்

சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பாப்போம் வாருங்கள்...

தேவையான பொருட்கள்: 
தோல் நீக்கிய வெள்ளை உளுந்து – 1/2 கப் கப் அரிசி மாவு – 2 கப் பொட்டுக்கடலை மாவு – 1/4 கப் பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் எள்ளு – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை : 
தோல் நீக்கிய வெள்ளை உளுந்தினை எடுத்து கடாயில் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும். உளுந்தின் நிறம் மாறும் அளவிற்கு முறுக்கின் நிறம் மாறும் என்பதால், மிதமான சூட்டில் வெண்மை நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும். 

பின் வறுத்து எடுத்த உளுந்தினை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். அரைத்து எடுத்த உளுந்தமாவுடன் 2 கப் அரிசி மாவு மற்றும் 1/4 கப் பொட்டுக்கடலை மாவு சேர்த்து அதனுடன் 1/2 டீஸ்பூன் பெருங்காய தூள் சேர்க்கவும். பிறகு இவற்றுடன், 2 டீஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதளவு எள்ளு சேர்த்து தேவையான அளவு உப்பினை சேர்க்கவும். இவை அனைத்தையும் 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவேண்டும்.

பின் முறுக்கு அச்சினில் வைத்து முறுக்கினை சற்று இடைவெளியோடு சுத்த வேண்டும். அவ்வாறாக இடைவெளிவிட்டால் தான் முறுக்கு சரியான அளவில் முழுமையாக எண்ணையில் வேகும். முறுக்கு அச்சினில் சுற்றிய முறுக்கை வாணலில் உள்ள எண்ணெய்யில் போட்டு நன்றாக வேகவிட்டு நிறம் மாறாமல் எடுத்தால் சுவையான முறுக்கு ரெடி.