Thursday, March 19, 2026
HomeUncategorized1 லட்சம் டாலரை எட்டிய பிட்காயின் மதிப்பு!

1 லட்சம் டாலரை எட்டிய பிட்காயின் மதிப்பு!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று, (டிசம்பர் 5) முதல்முறையாக பிட்காயின் விலை ஒரு லட்சம் டாலரை எட்டியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் விலை ரூ.87 லட்சமாகும்!

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்த பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்த முடியும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதால், முன்னேற்றம் காணத் துவங்கிய கிரிப்டோகரன்சி சந்தை, தொடர்ந்து உயர்வுப் பாதையிலேயே நீடிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments