தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன..
தமிழகத்தில் 600 நாட்களுக்குப்பின், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கியது மாணவ – மாணவிகளை பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவேற்று வகுப்பறையில் அமர வைத்தனர் …
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன.
இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவுறுத்தி அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன
