தேனி மாவட்டம் மங்களதேவி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் அப்பகுதியில் பெய்த கனமழையின் போது, ஒன்பதாம் வளைவு பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மற்றும் பக்தர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ்காரருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அனைவரும் குமுளி மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த வேளையில் நடந்த இந்தச் சம்பவம் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

