Tuesday, August 4, 2026
Homeவணிகம்பெங்களூரு, மும்பையை முந்தும் சென்னை… குறைந்த வாடகையால் GCC நிறுவனங்கள் குவிகின்றன!

பெங்களூரு, மும்பையை முந்தும் சென்னை… குறைந்த வாடகையால் GCC நிறுவனங்கள் குவிகின்றன!

ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு நிறுவனமான ‘சிஆர்இ மேட்ரிக்ஸ்’ (CRE Matrix) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, சர்வதேசக் திறன் மையங்களின் (GCCs) தேவையும் வரவேற்பும் கணிசமாக உயர்ந்துள்ளதால், சென்னையில் காலியாக உள்ள பிரைம் வணிக அலுவலக இடங்களின் அளவீடு 15.8 சதவீதத்திலிருந்து ஒற்றை இலக்கமான 9.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள Tier-1 நகரங்களிலேயே மிகக் குறைந்த சராசரி வாடகையாக, சென்னை ஏ-கிரேடு அலுவலகங்களின் சதுர அடி வாடகை மாதம் ரூ.75-ஆக மட்டுமே இருப்பதால், பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லியை விட குறைந்த செலவில் தரமான இடங்கள் கிடைக்கப் பெறுவதும், ஊழியர்களின் வேலைமாற்ற விகிதம் குறைவாக இருப்பதுமே இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

400-க்கும் மேற்பட்ட சர்வதேசக் திறன் மையங்களுடன் 2 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள சென்னை சந்தையில், புதிய அலுவலகக் கட்டிடங்களின் வரத்தைக் காட்டிலும் தேவை 1.8 மடங்கு அதிகரித்து வணிக ரியல் எஸ்டேட் துறை வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments