Home Uncategorized 31 ஆண்டுக்கு முன் மனைவி மாயம்: கணவன் புகார்

31 ஆண்டுக்கு முன் மனைவி மாயம்: கணவன் புகார்

வெள்ளியணை அருகே, 31 ஆண்டுக்கு முன், மனைவியை காணவில்லை என, கணவன் போலீசில் புகாரளித்தள்ளார். கரூர் மாவட்டம், வெள்ளியணை மூக்கணாங்குறிச்சி நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 58; விவசாயி. இவரது மனைவி தமிழரசி, 55; இவர் கடந்த, 1991ல் டிச., 15ல் வீட்டிலிருந்து வெளியே சென்றார்.

பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, பெரியசாமி, 31 ஆண்டுக்கு பின், நேற்று முன்தினம், போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Exit mobile version