Thursday, February 5, 2026
Homeசெய்திகள்தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் உயிர் இழப்பு.. அதிர்ச்சி!

தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் உயிர் இழப்பு.. அதிர்ச்சி!

 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பூச்சிரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேலு (32). அவர் தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சசிகலா (26) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகன் ஜோகித் வயது 4, கௌதம் வயது 2, இவர்களில் ஜோகித், தந்தை வேலை செய்யும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தான். நேற்று முன்தினம் ஜோகித்திற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் கிளினிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு டாக்டர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்துவிட்டு மாத்திரை வழங்கியதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் ஜோகித்துக்கு சசிகலா இரவு நேர மாத்திரை கொடுத்துள்ளார். அப்போது மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சு திறந்தால் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் ஜோகித்தை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஜோகித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

மருத்துவர் சொன்னதை கெட உடனே பெற்றோர் கதறி துடித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments