Home Uncategorized 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்

50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்

தமிழம் முழுவதும் பெரும் தொற்று காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக், தேநீர் கடைகள் திறந்த நிலையில் இந்த வார இறுதிக்குள் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனால், போக்குவரத்து கழகங்கள் 50 சதவீத பேருந்துகளை இயக்கும் வகையில் ஆயத்தமாகி வருகின்றன. அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதும் அரசு பேருந்துகள் இயங்கும். இந்த பேருந்து சேவை மாவட்டத்திற்குள்ளேயே இயங்கும் என மேலும் தகவல் தெரிவிக்கின்றன.

Exit mobile version