Home Uncategorized போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும் உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் வழங்க வேண்டும். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவு பொருட்கள் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏழு இலக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நகர்ப்புற, ஊரகப் பகுதி காலிப் பணியிடங்களை தகுதியான நபர்கள் கொண்டு நிரப்பிட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைகுமாறு ஆட்சியர்கள் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version