Home Uncategorized மங்கலத்துடன் தொடங்கியது.. புதுகை கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா!

மங்கலத்துடன் தொடங்கியது.. புதுகை கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா!

புதுகை கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா மங்கலத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை கம்பன் கழகம் தமிழகத்தில் மிக மூத்த கம்பன் கழகமாக செயல்பட்டு வருகிறது.

 10 நாட்கள் ஒவ்வொரு வருடமும் கம்பனை போற்றி இங்கு விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் புதுகை கம்பன் கழகம் தனது 50 ஆம் ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுகிறது.

kamban kazhagam

 அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள், திரை நட்சத்திரங்கள் என பல்துறை பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று பல சுவாரசியமான கருத்தரங்குகள், பேச்சு அரங்கம், பட்டிமன்றம், கவிதை என தமிழ் பிரியர்களுக்கு பல சுவையான நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.

 இந்த விழாவை புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவர் திருப்பணி செம்மல் திரு. எஸ். ஆர்.ராமச்சந்திரன், பொருளாளர் புதுகை பாரதி மற்றும் நிர்வாக குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து, இன்று இந்த கம்பன் விழா தொடங்கப்பட்டுள்ளது.

 முதல் நாள் நிகழ்வாக விழா மங்கலம் என்ற நிகழ்வோடு, அதனை தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர், சிறப்பு பேச்சாளர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களின் சிறப்புரையோடு இன்றைய முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வுகளை தினம்தோறும் மாலை 5.30 மணி முதல் தெய்வத் தமிழ் டிவி youtube சேனலில் கண்டு மகிழலாம்.

Exit mobile version