Home Uncategorized டெல்லியில் அக். 1ம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

டெல்லியில் அக். 1ம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

டெல்லியில் நடைபெறும் “இந்திய மொபைல் காங்கிரஸ்” மாநாட்டில் அக்டோபர் 1ம் தேதி கலந்து கொண்டு 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

அக்டோபர் 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்திய மொபைல் காங்கிரஸ்” மாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான நிகழ்ச்சியை ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப மன்றம் எனக் கூறபடும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) ஆகியவற்றால் கூட்டாக டெல்லி பிரகதி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அக்டோபர் 1-4ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இணைய வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை அக்டோபர் 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 6ஜி சேவைக்கான திட்டமிடல் குறித்தும், தேவை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவை நாட்டுக்கு அர்ப்பணித்தவுடன் முதலில் டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட பெருநகரங்களிலும் படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கப்படும் என தெரிகிறது.

குறிப்பாக  இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளிலும் பயிற்சி சேவை கிடைக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version