Wednesday, March 11, 2026
HomeUncategorized94 ரயில்கள் முழுவதுமாக ரத்து

94 ரயில்கள் முழுவதுமாக ரத்து

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம், அம்பத்தூர் பணிமனையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.19) காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்ட்ரலிலிருந்து இன்று இரவு 9.25, 10, 10.20, 10.35, 11.15, 11.45 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில், அரக்கோணத்திலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராமிலிருந்து இரவு 10.45, 11.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் என 10 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை இயக்கப்படும் 84 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பயணிகள் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து நள்ளிரவு 12.15, அதிகாலை 3.50, 5, காலை 6.30, 6.50, 7, 7.40, 8.20, 8.40, 9.10, 9.15, 9.35 மணிக்கும் சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.10 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கமாக அரக்கோணத்திலிருந்து அதிகாலை 5.25, காலை 6.40, 7.10, 8.15, 8.50 மணிக்கும், திருவள்ளூரிலிருந்து அதிகாலை 3.50, 5.55, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கும், ஆவடியில் இருந்து அதிகாலை 4.25, காலை 6.10, 6.40 மணிக்கும் திருத்தணியில் இருந்து காலை 6.30, 7 மணிக்கும் சிறப்பு ரயில்கள் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும். மேலும், அரக்கோணம் – திருத்தணி (காலை 6), திருவள்ளூா் – பொன்னேரி (அதிகாலை 5.20), அரக்கோணம் – கடற்கரை (காலை 6.20) இடையே என 37 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் அனைத்தும் புட்லூர், செவ்வாய்ப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம், இந்து கல்லூரி, அண்ணணூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பட்ரவாக்கம், கொரட்டூர் ஆகிய நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments