Tuesday, March 10, 2026
HomeUncategorizedசென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, பூங்காக்களில் நாய்களை அழைத்து வர சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை மாநகராட்சி விதித்துள்ள கட்டுப்பாடுகள்:

1. பூங்காவுக்குள் ஒரு உரிமையாளர் ஒரு நாயை மட்டுமே அழைத்து வர வேண்டும்,

2. நாயை உரிய கயிற்றை கொண்டு கட்டுவதுடன், அதன் வாய்ப்பகுதியை மூடியிருக்க வேண்டும்,

3. நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

4. தெருநாய்க்கள் மற்றும் கயிறு கட்டப்படாத நாய்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படாது,

5. பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments