Saturday, March 14, 2026
HomeUncategorizedதுருக்கியில் வீதியில் உலாவும் 40 லட்சம் தெரு நாய்கள்

துருக்கியில் வீதியில் உலாவும் 40 லட்சம் தெரு நாய்கள்

நாய்களை அப்புறப்படுத்த நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா…

தெரு நாய்கள் குறுக்கே வருவதால் ஏற்படும் விபத்துக்கள், தெரு நாய் கடிக்கு ஆளாகும் மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வரும் வாரத்தில் துருக்கி நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்ய உள்ளது. துருக்கியில் சுமார் 40 லட்சம் தெருநாய்கள் வீதிகளில் உலா வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெரு நாய்களை தத்தெடுக்கும் முறையை ஊக்குவிக்கவே தாங்கள் மசோதா கொண்டு வர இருப்பதாக ஆளும் கட்சி கூறுகிறது. இன்னொரு புறம் , அங்கு தெரு நாய்களை கருணை கொலை செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெறும் 2.7 சதவீதம் பேர் மட்டுமே தெருநாய்களை கருணை கொலை செய்ய ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments