Thursday, March 19, 2026
HomeUncategorizedஎல்.முருகன் சென்னை திரும்பினார் - பாஜகவினர் உற்சாக வரவேற்பு

எல்.முருகன் சென்னை திரும்பினார் – பாஜகவினர் உற்சாக வரவேற்பு

நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களின் அமைச்சரவையில், தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறைக்கான மத்திய இணை அமைச்சராக பொறுப்பெடுத்துக் கொண்ட பிறகு, இன்று தமிழகம் வந்தடைந்தேன். 

சென்னை விமான நிலையத்திலும், நமது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்திலும், நமது தாமரைச் சொந்தங்கள் சிறப்பான வரவேற்பளித்தார்கள். அவர்கள் அனைவரது அன்பிற்கும், பாசத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கமலாலய அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கெடுத்து கலந்துரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் சகோதரர் திரு.@annamalai_k அவர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments