Thursday, March 19, 2026
HomeUncategorizedதந்தையர் தினம் இன்று

தந்தையர் தினம் இன்று

உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் மேலும் வேறு நாடுகளில் பிற நாட்களிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதியில் பெரும்பான்மையினரால் கொண்டாடப் படும் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையரைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவு விழாவாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா ஜெர்வீஸ் தன்னுடைய தாயை கவுரவிக்கும் வகையில் 1909–ம் ஆண்டு முதலாவதாக அன்னையர் தினத்தை கொண்டாடி உலகுக்கும் அறிமுகப்படுத்தினார்

அதனை தொடர்ந்து தன்னுடைய வாழ்கையில் ஏற்படும் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமான தந்தையை கவுரவிக்கும் வகையில் 1910–ம் ஆண்டு அமெரிக்கா வாஷிங்டன் நகரில் 1910–ம் ஆண்டு ஜூன் 19–ந் தேதி சனேரா ஸ்மார்ட் டாட் என்பவர் தன்னுடைய தந்தையை கவுரவிக்கும் வகையில் தந்தையர் தினத்தை கொண்டாடினார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments