Tuesday, March 17, 2026
HomeUncategorizedதமிழகத்தில் 5 மாவட்டங்களில், தலா 50 படுக்கை வசதியுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில், தலா 50 படுக்கை வசதியுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை

இந்திய மருத்துவ முறை சிகிச்சைகளை விரிவுப்படுத்தும் வகையில், ஆயுஷ் அமைச்சகம், சென்னை, தேனி, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில், தலா 50 படுக்கை வசதியுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை அமைக்க, 2018 – 19ல் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இம்மருத்துவமனைகளில், ஒருங்கிணைந்த இந்திய முறை மருத்துவ பிரிவுகள் இயங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், சித்தா மற்றும் யோகா, இயற்கை மருத்துவ பிரிவுகள் மட்டுமே செயல்படுகின்றன. மற்ற துறைகள் புறக்கணிக்கப்படுவதாக, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், சமீபத்தில் ஆயுஷ் மருத்துவ குழுவினர் சோதனையில், ஆயுர்வேதா போன்ற துறைகள் இருப்பதாகவும் கணக்கு காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments