Friday, March 13, 2026
HomeUncategorizedKB95 ( கே.பாலசந்தர் அவர்களின் 95-வது பிறந்தநாள் விழா )

KB95 ( கே.பாலசந்தர் அவர்களின் 95-வது பிறந்தநாள் விழா )

நாடகம், சின்னத்திரை, திரைப்படத்துறையில் சாதனை படைத்த நம் இயக்குநர் சிகரம் தாதா சாஹேப் ஃபால்கே விருது பெற்ற கே.பாலசந்தர் அவர்களின் 95-வது பிறந்தநாள் விழா.  கே.பாலசந்தர் அவர்களை நேசிக்கும்  நெஞ்சங்கள் அனைவரும் ஒன்று கூடி அவரது சாதனையை போற்றி மகிழும் விழா.

ஏராளமான நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை உருவாக்கி, தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய, திரையுலக ‘ஜாம்பவான்’ நம் இயக்குநர் சிகரம் திரு. கே.பாலசந்தர்.  அவரின் பிறந்த நாள் விழா ஆத்மார்த்தமாக சாலிகிராமம் கோல்டன் திருமணக் கூடம் அரங்கில் ஜுலை 9ந் தேதி காலை 8  மணி முதல் நண்பகல் 11 மணி வரை நடைபெற உள்ளது. இயக்குநர் சிகரம்  கே. பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவசியம் நீங்கள் கலந்துகொண்டு,  விழாவை சிறப்பிக்க, அன்போடு வேண்டுகிறேன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments