Thursday, April 30, 2026
HomeUncategorizedஅன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு, பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி

அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு, பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி

புற்றுநோயால் அவதிப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.1 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது.

அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரிட்டனிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்க தேவையான உதவியை பிசிசிஐ வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வீரர் சந்திப் பாட்டீல் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் அன்ஷுமன் கெய்க்வாட் சிகிச்சைப் பெறுவதற்கு வசதியாக ரூ.1 கோடி நிதியுதவியை பிசிசிஐ வழங்கியுள்ளது. இதுதொடர்பான உத்தரவை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ நிர்வாக கவுன்சில்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு சிகிச்சை வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை வழங்குமாறு பிசிசிஐ நிர்வாகக் குழுவுக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து அந்தத் தொகை அவருக்கு உடனடியாக அனுப்பப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments