புதுக்கோட்டை கம்பன் கழகம் 49 ஆம் ஆண்டாக தொடர்ந்து சிறப்பான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. இந்த ஆண்டு ( 2024) 10 நாள்கள் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 4 ஆம் நிகழ்ச்சி 15/07/2024 திங்கட்கிழமை அன்று நடந்தது. இதில் நிகழ்ச்சியை மாண்பமை. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையேற்றார்.
விழாவில் தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு.கி.வைத்தியநாதன் அவர்களுக்கு “கம்பன் மாமணி” விருதையும், திருச்சி நகைச்சுவை மன்றத்தின் செயலாளர் திரு. க.சிவகுருநாதன் அவர்களுக்கு “இலக்கிய மாமணி” விருதையும், முன்னாள் தக்காரும், புதுக்கோட்டை தொழிலதிபருமான திரு.ப.செந்தில்குமார் மற்றும் புதுக்கோட்டை விஜய் நிறுவனங்களின் அதிபர் திரு. வீ.முருகானந்தம் ஆகியோருக்கு “கம்பன் பணிவள்ளல்” விருதையும் வழங்கி, கம்பன் கவித்திறன் இராமாயணக் காதையில் எப்படியெல்லாம் மிளிர்கின்றன என்பதை சுவைபட விளக்கினார்.

