Thursday, March 12, 2026
HomeUncategorizedபுதுகை கம்பன் கழக விழாவில் ஆன்மீக நெறிச்செம்மல் முனைவர் .திரு.சொ.சொ.மீ. சுந்தரம் ஐயா

புதுகை கம்பன் கழக விழாவில் ஆன்மீக நெறிச்செம்மல் முனைவர் .திரு.சொ.சொ.மீ. சுந்தரம் ஐயா

புதுக்கோட்டை கம்பன் கழக 49 ஆம் ஆண்டுவிழா 10 நாள் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருவது அறிந்த செய்தி. இவ்விழாவின் 5 ஆம் நிகழ்ச்சியின் 2 ஆம் பகுதியாக, (16/07/2024) அன்று “சுழலும் சொல்லரங்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது.  

இதில் விழாக்குழு உறுப்பினர். முனைவர். எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்த, திருக்குறள் கழகத்தலைவர். க. ராமையா அவர்கள் தலைமையில் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மூத்த வழக்கறிஞர். திரு. ஏ.சந்திரசேகரன், நகர்மன்ற முன்னாள் தலைவர். திரு. துரை.திவ்யநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

திரு. இராம. சுப்புராமன், சுதர்சன் வித்யா மந்திர் வி.முருகேசன், சுப்பராமைய்யர் பள்ளி விஜய.ரவி.பல்லவராயர், தேசிய இலக்கிய மன்றத்தலைவர் திரு.எஸ்.ஆரோக்கியசாமி, 
நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் திரு.அ.மு.சை.இப்ராஹிம் பாபு,  மகாத்மா காந்தி பேரவைத்தலைவர் திரு.வைர.ந.தினகரன், விவசாய சங்கத்தலைவர். எஸ்.தனபதி, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.துரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“சுழலும் சொல்லரங்கத்தின் நடுவராக “ஆன்மீக நெறிச்செம்மல்” மதுரை.திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் அங்கம் வகிக்க, “பகைவர்களை ராமன் என்ன செய்வது சரி?” என்னும் பொருளில், “மன்னிப்பதே சரி” என புதுகை கம்பன் கழகச்செயலாளர் திரு. ரா.சம்பத் அவர்களும், ” கண்டிப்பதே சரி” என சென்னை பத்மா மோகன், “தண்டிப்பதே சரி” என மயிலாடுதுறை.  முனைவர். திருமதி. பா.முத்துலெட்சுமி ஆகியோர் திறம்பட வாதிட்டனர். விழா நிறைவில் மகாராணி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.வள்ளியம்மை சுப்ரமணியன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments