கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே,செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி செய்தி நிறுவனம் சார்பில், விவாதம் நடைபெறுவதாக இருந்தது.
தற்போது, செப்.,10ல் நடக்கவிருந்த விவாதத்தை ரத்து செய்த டொனால்ட் டிரம்ப், செப்.,4ல் பாக்ஸ் நியூஸ் சேனல் விவாதத்தில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்த பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம், டிரம்புக்கு மிகவும் நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 4ம் தேதி பார்வையாளர்கள் முன்னிலையில் பாக்ஸ் செய்தி நிறுவனம் சார்பில், விவாதம் பென்சில்வேனியாவில் நடக்க உள்ளது.
எந்த இடம், எந்த நேரமாக இருந்தாலும் விவாதத்தில் பங்கேற்கத் தயார் என்று ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் பதில் கூறியுள்ளார். டிரம்ப் சொல்வது இதுதான்!
‘பென்சில்வேனியாவில் செப்டம்பர் 4ம் தேதி பாக்ஸ் நிறுவனம் நடத்தும் விவாதத்தில் பங்கேற்கிறேன். விதிகள் என்ன என்பது குறித்து செய்தி நிறுவனம் குறிப்பிடவில்லை என்றாலும், சி.என்.என் விவாதத்தை போல் இருக்கும் என நினைக்கிறேன்’ என சமூகவலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்..

