Friday, March 13, 2026
HomeUncategorizedநிலா...நிலா ஓடிப் போ...!: பூமியை விட்டு விலகிச்செல்லும் நிலா: ஆய்வில் தகவல்.

நிலா…நிலா ஓடிப் போ…!: பூமியை விட்டு விலகிச்செல்லும் நிலா: ஆய்வில் தகவல்.

பூமியின் துணைக்கோளான நிலா, மெதுவாக விலகி செல்வதாகவும், இதனால் அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்சின்- மடிசான் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிலா குறித்து ஆய்வு செய்தனர். 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறையை அடிப்படையாக வைத்து நடந்த இந்த ஆய்வில், நிலாவானது பூமியை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு 3.8 செ.மீ., தூரம் நிலா நகர்ந்து வருகிறது.

இதனால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இது நீடித்தால் அடுத்த 20 கோடி ஆண்டில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும். 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை இதற்கு காரணமாக உள்ளது. இதன் சக்திகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக நிலா விலகிச் செல்கிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட பல்கலை பேராசிரியர் ஸ்டிபன் மியர்ஸ் கூறியதாவது: நிலா மெதுவாக விலகி செல்வதால் பூமியின் சுழலும் திறன் குறையும். நவீன புவியியல் செயல்முறைகள் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பான பழமையான பாறைகளை ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments