Saturday, March 28, 2026
HomeUncategorizedபிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என இஸ்ரோ தலைவர்

பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என இஸ்ரோ தலைவர்

பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவதாகவும் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்திருப்பார்கள். வேற்று கிரகவாசிகள் குறித்து வியக்கும் படியாக பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய  ஆய்வை நடத்திகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, “பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயமாக உள்ளன. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.

100 ஆண்டுகளுக்கு முன் நமது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை அடியோடு மாறியிருக்கிறது. இத்தகைய மைக்ரோபோன், கேமரா, லைட் மற்றும் தகவல் பரிமாற்ற வசதிகள். தொலைகாட்சி என எதுவும் இல்லாமல் இருந்தது. இவை அனைத்தையும் நாம் 100 ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments